முட்டை பஃப்ஸில் ஊழல்.. வசமாக சிக்கிய ஜெகன் மோகன் - அதிரும் ஆந்திரா!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ரூ.3.62 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெகன் மோகன்
2024 ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது போது ஆந்திர மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது .இதில் தெலுங்கு தேசம் -பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மீண்டும் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த காலத்தில் முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அடுத்த குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் 2019 - 2024 வரையிலானஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக ரூ.3.62 கோடிக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. வருடத்துக்கு ரூ.72 லட்சதுக்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்குதேசம் கட்சி கூறியுள்ளது.
முட்டை பஃப்ஸில் ஊழல்
இது தினசரி சாப்பிடும் 993 முட்டை பஃப்ஸுக்கு சமம்.இது ஐந்தாண்டு காலத்தில் 18 லட்சம் முட்டை பஃப்ஸ்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு,'' பாதுகாப்பிற்காக செலவழித்த அளவுக்கதிகமான பணம், ருஷிகொண்டா அரண்மனையைக் கட்டியது .
தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பிரத்யேக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியது .இந்த சூழலில் ஆந்திர அரசியலில் முட்டை பப்ஸ் ஊழல் வேகமெடுத்துள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.