அடிக்கடி பீட்சா சாப்பிடுவீங்களா; இவ்வளவு ஆபத்து இருக்கு - தெரிஞ்சுக்கோங்க!

Pizza
By Sumathi May 20, 2023 12:30 PM GMT
Sumathi

Sumathi

in உணவு
Report

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது பீட்சா.

பீட்சா

சிலர் அடிக்கடியோ அல்லது வாரம் தவறாமல் ஒருமுறையாவது பீட்சா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பீட்சாவின் தனித்துவமான சுவைக்கு, சீஸ் சேர்க்கப்படுவது மற்றும் டாப்பிங்ஸை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

அடிக்கடி பீட்சா சாப்பிடுவீங்களா; இவ்வளவு ஆபத்து இருக்கு - தெரிஞ்சுக்கோங்க! | Effects Of Eating Pizza Regularly

மேலும், இவை விரைவாக கிடைக்க கூடியவை. பிரபலமாக இருந்தாலும் கூட பீட்சா ஒரு ஜங்க் ஃபுட் என்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் சில உடல்நல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால், கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்க கூடும்.

பாதிப்புகள்

இதய நோய் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரிக்கிறது. சில பீட்சா ஸ்லைஸ்கள் சாப்பிட்டாலே உங்கள் தினசரி கலோரி நுகர்வில் 40% முதல் 60% வரை நிரம்பி விடும். வெகுவிரைவாக உடல் எடை கூடும் அபாயம் ஏற்படுகிறது.

அடிக்கடி பீட்சா சாப்பிடுவீங்களா; இவ்வளவு ஆபத்து இருக்கு - தெரிஞ்சுக்கோங்க! | Effects Of Eating Pizza Regularly

Pepperoni, Bacon மற்றும் Sausage போன்ற ஹை-ஃபேட் ப்ராசஸ்ட் இறைச்சிகளை உங்கள் பீட்சாவின் டாப்பிங்ஸாக கொண்டு சாப்பிடுவது குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற சில வகை கேன்சர்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

வழக்கமான அடிப்படையில் 3 - 4 பீட்சா ஸ்லைஸ்கள் அல்லது அதற்கு மேல் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது வாங்கி சாப்பிடுங்கள்.