வெயிலால் தோல் கறுப்பாகிருச்சா? இதை ட்ரை பண்ணுங்க - ரிசல்ட் கன்ஃபார்ம்!

Heat wave
By Sumathi May 16, 2023 07:53 AM GMT
Sumathi

Sumathi

in அழகு
Report

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சன் டானை எளிமையாக சரிசெய்யலாம்...

கற்றாழை ஜெல் 

சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தோல் மற்றும் முடி விரைவாக சேதமடைகின்றன. தோல்களில் தான் சூரிய கதிர்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரே இரவில் சன் டானை சரி செய்யலாம்.

வெயிலால் தோல் கறுப்பாகிருச்சா? இதை ட்ரை பண்ணுங்க - ரிசல்ட் கன்ஃபார்ம்! | Effective Home Remedies To Remove Sun Tan

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை சேர்த்து முகம், கை, கழுத்துகளில் தடவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி சருமம் மென்மையாக காணப்படும். சூரிய ஒளி, தோல் வேக்காடு பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது ஊட்டமளிக்கிறது மற்றும் சேதமடைந்த சருமத்தை குணப்படுத்துகிறது.

எலுமிச்சை மற்றும் தேன்

வெயிலால் தோல் கறுப்பாகிருச்சா? இதை ட்ரை பண்ணுங்க - ரிசல்ட் கன்ஃபார்ம்! | Effective Home Remedies To Remove Sun Tan

எலுமிச்சை மற்றும் தேனில் சன் டானை அகற்ற உதவும் சில வேதிப்பொருட்கள் உள்ளன. இரண்டையும் ஒன்றாய் கலந்து தோலில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விடவும். அதன்பின் குளிர்ந்த நீரை கொண்டு கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தக்காளி ஃபேஸ் பேக்

வெயிலால் தோல் கறுப்பாகிருச்சா? இதை ட்ரை பண்ணுங்க - ரிசல்ட் கன்ஃபார்ம்! | Effective Home Remedies To Remove Sun Tan

தக்காளி சன் பர்ன் அல்லது டான்களை முழுமையாக நீக்க கூடிய பயன்களை கொண்டுள்ளது. இதில், லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இயற்கையாகவே இதில் சில ப்ளீச்சிங் அமிலங்கள் உள்ளன. ஒரு தக்காளியை பேஸ்ட் செய்து தோலில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பிறகு கழுவினால் நல்ல மாற்றம் கிடைக்கும்