வெயில் காலத்தில் நுங்கு, இளநீர் எப்போ குடிக்கணும் தெரியுமா? - மருத்துவரின் பதில்

healthtips benefitsoftenderfruit howtocureandpreventurinarytract howtopreventurinarytract
By Petchi Avudaiappan Apr 06, 2022 12:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் நமது மனம் இயற்கையாகவே குளிர்ச்சியான பானங்களை நோக்கி நகரும். அந்த அளவுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

பொதுவாக வெயில் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளில் சிறுநீர்ப்பாதை தொற்று முக்கியமானது. என்னதான் தண்ணீர் நிறைய குடித்தாலும் வெயில் காலத்தில் வியர்வை அதிகரிப்பதால் சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருக்கும்.  இதனால் அதன் அடர்த்தி அதிகரிக்க செய்து  சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் இருக்கும். 

வெயில் காலத்தில் நுங்கு, இளநீர் எப்போ குடிக்கணும் தெரியுமா? - மருத்துவரின் பதில் | When Tenderfruit Eat In Summer Season

நீங்கள் தினமும் தண்ணீர் 2 முதல் 3 லிட்டர் வரை குடிப்பதாக இருந்தால் கோடைக்காலத்தில் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் பிரிட்ஜில் வைத்த குளிர் நீரை குடிக்காமல் மண்பானையில் வைத்த நீரை பருகலாம். இதேபோல்  காய்ச்சி ஆறவைத்த நீரை குடிக்கலாம்.

சிறுநீர்த்தொற்று பிரச்சனைக்கு நுங்கு, இளநீர் போன்றவை சிறந்த தீர்வை தரக்கூடியதாகும். ஆனால் இவற்றை  காலையில் 11. 30 மணிக்குள் எடுத்துவிட வேண்டும். மதிய வெயிலில் சுட சுட இளநீர் குடிப்பதும் நுங்கு சாப்பிடுவதும் உடல் வெப்பநிலையில் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது நாம் அறியாத ஒன்று. 

இது சளி, இருமல், தொண்டை புண் ஆகியவற்றை உண்டாக்கலாம். அதேசமயம் வெறும் வயிற்றில் இளநீர் எடுக்காமல் காலை உணவுக்குப்பின் எடுக்கலாம். இதன்மூலம் நாள் முழுக்க புத்துணர்ச்சியாக குளிர்ச்சியாக உடல் இருக்கும்.