சைக்கிளை காணவில்லை.. இ-மெயில் அனுப்பிய மாணவி - கல்வி அமைச்சர் செய்த செயல்!
10-ம் வகுப்பு மாணவிக்கு புதிய சைக்கிளை கல்வி அமைச்சர் பரிசளித்துள்ளார்.
சைக்கிள் திருட்டு
கேரள மாநிலம் எர்ணாகுளம் பாலரிவட்டம் பகுதியைச் சேர்ந்த அவந்திகா என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் சைக்கிள் கடந்த மாதம் திருட்டு போயுள்ளது.
தனது சைக்கிளை திருடன் திருடிச் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாணவி கண்டறிந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த மாணவி, இந்த தகவலை அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டிக்கும் இ-மெயில் செய்துள்ளார்.
புதிய சைக்கிள்
இதனையடுத்து அவந்திகாவை தொடர்பு கொண்டு பேசிய கல்வி அமைச்சர் சிவன்குட்டி புதிய சைக்கிள் ஒன்றையும் மாணவிக்கு பரிசளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மாணவி அவந்திகா "எனது புகாருக்கு கல்வி அமைச்சர் சிவன்குட்டி பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் என்னை தொடர்புகொண்டு சைக்கிள் குறித்து விசாரித்தார். பின்னர் எனக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்தார். அமைச்சரிடம் இருந்து புதிய சைக்கிள் கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.