இந்த நாட்டில் எல்லாமே இலவசம்தான் - ஆனால் கல்யாணத்தில் ஒரே ஒரு கண்டிஷன்!
நாடு ஒன்று மக்களுக்கு அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது.
எல்லாமே இலவசம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று பூடான். இங்கு பிச்சைக்காரர்களே கிடையாது. வீடற்றவர்களும் கிடையாது. யாருக்காவது சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தால் அந்த நாட்டு மன்னரே இடம் ஒன்றை வழங்கி வீட்டையும் கட்டிக் கொடுப்பார்.
ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் இலவசமாக கொடுக்கிறது. மருத்துவம், வெளிநாட்டிற்கு உயர் சிகிச்சை சென்றால் கூட அதற்கான கட்டணத்தை அந்த நாட்டு அரசே ஏற்றுக்கொள்கிறது.
அந்த கண்டிஷன்
ஊரக பகுதிகளில் மின்சாரமும் இலவசம் தான். விவசாயிகளுக்கும் உரம், விதைகள் ஆகியவற்றை அரசே இலவசமாக கொடுக்கிறது. ஆனால், பூடான் மக்களுக்கு வெளிநாட்டினரை திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. மன்னர் குடும்பம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு உண்டு.
இங்கு பெரும்பாலும் புத்த மதத்தினரை கடைபிடிப்பவர்கள்தான். மனைவியின் வீட்டிற்கு கணவர் சென்று விடுவார். போதுமான அளவு அவர் பணம் சம்பாதித்த பிறகே தனியாக வசிக்க செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.