முக்கிய அறிவிப்பு, இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் - பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Ministry of Education Tamil nadu Education
By Vinothini Jul 27, 2023 08:17 AM GMT
Report

 தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

education-dept-says-everyone-should-sign-in-tamil

கடந்த ஆண்டே அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக தமிழ் மொலையை தான் பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சுற்றறிக்கை

இந்நிலையில், தற்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும்,

education-dept-says-everyone-should-sign-in-tamil

கையெழுத்திடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையைக் குறிப்பிட்டுப் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்களையும் தமிழிலேயே கையொப்பமிட அறிவுறுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.