டெல்லிக்கு நான் தான் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்கும் பழனிசாமி - கொந்தளித்த கனிமொழி
டெல்லிக்கு நான் தான் சிறந்த அடிமை என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபிப்பதாக கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.
சிறந்த அடிமை
தூத்துக்குடியில் நடைபெற்ற SIRக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “முதலாளிக்கு ஆதரவாக அடியாட்கள் இருப்பது போல் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக இருக்கிறது.

S.I.R-க்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குப் போட்டால், ஆதரவாக பழனிசாமி வழக்குப் போடுகிறார். டெல்லி கூட்டத்திற்கு நான் தான் சிறந்த அடிமை என காட்டிக்கொள்கிறார் பழனிசாமி” என்று விமர்சித்துள்ளார்.
கனிமொழி காட்டம்
மேலும், பாஜக கூட SIRஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பாஜகவின் கிளைக் கழகமாகவே செயல்படும் அதிமுகவும் அதன் சிறந்த அடிமையான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் ரகாட்டக் கோஷ்டி நாம் தான் என்ற காமெடி போல இந்தியாவிலேயே SIRஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.