இப்படிதான் கொளத்தூரில் ஜெயிச்சீங்களா? நிர்மலா சீதாராமன் காட்டம்!
போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா என நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி வாக்காளர்கள்
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணிக் கட்சி விவகாரங்களில் எப்போதும் பிஜேபி தலையிடாது.

கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை வைத்துதான் கொளத்தூரில் வெற்றி பெற்றீர்களா?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு SIR என்றால் என்னவென்றே தெரியவில்லை. Special intensive revision-க்கு பதிலாக Special intensive restriction என்று கூறுகிறார்.
நிர்மலா சீதாராமன் விமர்சனம்
Revision ஐ Restriction எனக் கூறும் துணை முதல்வர் இதை என்னவென்று புரிந்துகொண்டு பேசுகிறார். எதற்காக போராட்டம் என்றும் புரியவில்லை. வழக்கமாக நடக்கும் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் நாடக அரசியல் அவர்களது வன்மத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

எஸ்.ஐ.ஆர் மூலமாக யாருக்கும் வாக்குரிமை போகாது. உயிரிழந்தவர்கள், ஊரை விட்டு சென்றவர்களின் பெயர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என்கிறார்களா? எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக திமுக ஏன் போராடுகிறது என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan