கரும்பு கொள்முதலில் முறைகேடு - ஈபிஎஸ் எச்சரிக்கை!
கரும்பு கொள்முதலில் முறைகேடு தடுக்கப்படாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரும்பு முறைகேடு
தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடபடும் பண்டிகைகளின் ஒன்றான பொங்கல். இதற்கு, தமிழக அரசின் சார்பாக இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு தேவையான பச்சரிசி சர்க்கரை முந்திரி திராட்சை கருப்பு அல்லது அதற்கான பணம் வழங்குவது வழக்கம்.
இதற்கு முன்பு கரும்பு தரமற்ற முறையில் வழங்கியதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்ட நிலையில் தமிழகஅரசு முன்பு வெளியிட்ட அறிக்கையில் கரும்பு வளங்கபடமாட்டாது என்று அறிவித்திருந்தது. இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் கரும்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கரும்பு வழக்கங்கபடும் என்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
ஈபிஎஸ் எச்சரிக்கை
ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடந்து வருகின்றன.
ஆர்ப்பாட்டம்
செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும்,
செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்த அரசை கடுமையாக எச்சரிக்கை செய்கிறேன். ஊழல் செய்யும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற திமுக அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.