அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்!
சென்னையில், அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது.
மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிடவற்றை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர்.14 மாதம் தி.மு.க. ஆட்சியில் விலைவாசி,சொத்து வரி,மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது. எங்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க் கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக தான்; அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார்.
திடீர் மயக்கம்
அ.தி.மு.க.விற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறைக்க, கட்சியினர் மீது அவர் பொய் வழக்கு போடுகிறார் என கூறினார்.
இந்நிலையில், மேடையில் நின்று கொண்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தண்ணீர் கொடுக்கப்பட்டு மேடையிலேயே அமர வைக்கப்பட்டார்.