தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Jul 04, 2024 01:31 PM GMT
Report

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.

தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்! | Edappadi Palansamy X Post About Dmk Govt

சம்மந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

போதைப் பொருள் விற்பனை; காவல்துறைக்கு சுதந்திரம் வழங்குக - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

போதைப் பொருள் விற்பனை; காவல்துறைக்கு சுதந்திரம் வழங்குக - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?

தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்; நிர்வாகத் திறனற்ற திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்! | Edappadi Palansamy X Post About Dmk Govt

கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.