போதைப் பொருள் விற்பனை; காவல்துறைக்கு சுதந்திரம் வழங்குக - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Jul 03, 2024 03:00 PM GMT
Report

போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இதுவரை கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வியாபாரம் தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தங்கள் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் யார் தாதா? என்று போட்டி சண்டை இதுவரை ஏற்பட்டதில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் விற்பனை; காவல்துறைக்கு சுதந்திரம் வழங்குக - ஈபிஎஸ் வலியுறுத்தல்! | Edappadi Palansamy Request To Dmk Government

இந்நிலையில் நேற்று, 2.7.2024 அன்று அதிகாலை, தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள சென்னை புறநகர் பகுதியான பெருங்களத்தூரில், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்கும் ஒரு பகுதிக்கு யார் தாதா என்ற கோஷ்டி சண்டை (Gang War) ஏற்பட்டு,

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை!

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை!

வலியுறுத்தல் 

முடிவில் இச்சண்டை இரண்டு இளைஞர்கள் படுகொலையாக மாறியிருப்பது தமிழகத்திற்கே புதிது என்று இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. விடியா திமுக திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு காவல்துறையின் தோல்விகளில் இதுவும் ஒன்று என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

போதைப் பொருள் விற்பனை; காவல்துறைக்கு சுதந்திரம் வழங்குக - ஈபிஎஸ் வலியுறுத்தல்! | Edappadi Palansamy Request To Dmk Government

இனியாவது அரசியல் குறுக்கீடின்றி தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை அடியோடு நிறுத்த தேவையான கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.