ரொம்ப ஓவரா ஆடாதீங்க; இன்னும் 7 மாசம் தான் - எடப்பாடி தாக்கு!
7 ஆண்டு காலத்தில் திமுகவின் ஆட்சி அதிகாரம் பறிக்கப்படும் என்று இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக ஆட்சி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கோவை, பொள்ளாச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கட்சி செய்யும் தவறுகளை அனைத்து கூட்டணிக்கட்சிகளும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அழிந்து வரும் காங்கேயம் காளை இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற கிட்னி திருட்டு சம்பவத்தை குழு அமைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது அதிமுக. உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தை ரூ.255 கோடியில் அமைத்து கொடுத்தது.
இபிஎஸ் தாக்கு
மின்சாரத்தைத் தொட்டால் தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அதிமுக மக்களை நம்பி இரு்கிகறது. திமுக கூட்டணி கட்சிகளை நம்பி இருக்கிறது. 2026ல் மக்களின் தீர்ப்பே இறுதியானது.
திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. சமையல் பொருட்களின் விலை 100 மடங்கு உயர்ந்துள்ளது. திமுக அரசு அனைத்து துறையிலும் ஊழல் நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில் மெகா ஊழல் நடக்கிறது.
அதிமுக ஐசியு.வில் போகப்போவதாக திமுக.வினர் சொல்கின்றனர். ஆனால் திமுக எப்பொழுதோ ஐசியு.க்கு சென்றுவிட்டது. இன்னும் 7 மாத காலம் அதான் அதன் பின்னர் உங்கள் கையில் இருக்கும் ஆட்சி அதிகாரம் பறிக்கப்படும். அதற்குள் இவ்வளவு ஆட்டம் போடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.