பாமக எங்கள் வசம்தான்; எங்களை நீக்கமுடியாது - அதிர்ச்சியளித்த அன்புமணி!
கட்சி முழுவதும் அன்புமணி ராமதாஸ் வசம்தான் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
பாமக யார் வசம்?
பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அடியோடு அன்புமணியை பாமகவின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். அவர் தனியாக கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி அணியைச் சேர்ந்த திலகபாமா ‘‘சட்டரீதியாக கட்சி அன்புமணி வசம்தான் முழுமையாக இருக்கிறது. பாமக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி.
பாட்டாளி மக்கள் கட்சி, சின்னம் தலைமையிடம் என என்ன அறிவிக்கப்பட்டு இருக்கிறதோ அது எல்லாம் மருத்துவர் அன்புமணி தலைமையில் அப்படியே தான் இருக்கிறது. ராமதாஸ் ஐயாவுக்கு சில மன கசப்புகள் இருக்கலாம்.
பாலு உறுதி
அதை அவர் தான் சரி செய்து வர வேண்டும். ஏனென்றால் அவர் பெரியவர். மூத்தவர்களை நாம் சரி செய்ய முடியாது. அவர்கள் தான் நம்மை சரி செய்ய வேண்டும். ஆகையால் கட்சி முழுவதும் அன்புமணி ராமதாஸ் வசம்தான் இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாமக வழக்கறினர் பாலு, ‘‘அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பா.ம.க தலைவர் அன்புமணி தான். அன்புமணியின் தலைவர் பதவியை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்துள்ளது பா.ம.க பொதுக்குழு. பா.ம.க நிறுவனர் ராமதாசின் அறிவிப்பு கட்சி விதி மற்றும் தேர்தல் ஆணைய விதியின் படி செல்லாது.
பா.ம.க தலைவராக அன்புமணியைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. யாரையும் உளவு பார்க்கும் எண்ணமோ, விருப்பமோ ஒரு போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை’’ என கூறியுள்ளார்.