தவெக -அதிமுக கூட்டணி முடிவு? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் இதுதான்..!
கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தவெக
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர்,’’ண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 171 பேருக்கு நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவைப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விஜய் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. விஜய் அவரது கொள்கையைத் தெரிவித்திருக்கிறர்.
எடப்பாடி
அது சரியா தவறா என்று நான் சொல்ல முடியாது என்று கூறினார். மேலும் தவெக கூட்டணியில் வருபவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் சம உரிமை வழங்கப்படும் என்ற கேள்விக்கு ,’’தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருக்கிறது.
விஜய் இப்போது தான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு அமைக்கப்படும் எனக் கூறினார்.