ஆளுநர் ரவியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - என்னவா இருக்கும்!
ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று பகல் 12.45 மணியளவில் சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசுகிறார். அவருடன் கே .பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி ,ஜெயக்குமார் , சி.வி. சண்முகம் உள்ளிட்ட கட்சியின் மொத்த நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.

இதில் தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள், அது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அழைத்தபோது அந்த சந்திப்பினை ஈபிஎஸ் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஆளுநரை சந்திக்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.