பிரதமர் சர்ச்சை பேச்சு: இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல - ஈபிஎஸ் அறிவுரை!

ADMK BJP Narendra Modi Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Jiyath Apr 23, 2024 08:04 AM GMT
Report

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும்.

பிரதமர் சர்ச்சை பேச்சு: இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல - ஈபிஎஸ் அறிவுரை! | Edappadi Palaniswami Indictment Pm Narendra Modi

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

கடவுள் ராமரை விட பெரியவர்களா? அம்பேத்கர் வந்தாலும் அது நடக்காது - பிரதமர் மோடி!

கடவுள் ராமரை விட பெரியவர்களா? அம்பேத்கர் வந்தாலும் அது நடக்காது - பிரதமர் மோடி!

தவிர்க்கப்பட வேண்டும்

அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

பிரதமர் சர்ச்சை பேச்சு: இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல - ஈபிஎஸ் அறிவுரை! | Edappadi Palaniswami Indictment Pm Narendra Modi

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.