தேசிய கட்சி அலுவலகம் தாக்கப்படுவதே திமுகவின் சட்டம் ஒழுங்குக்கு அத்தாச்சி - எடப்பாடி பழனிச்சாமி

Communist Party DMK Edappadi K. Palaniswami Tirunelveli
By Karthikraja Jun 15, 2024 06:14 AM GMT
Report

 திருநெல்வேலி கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வேறு சமூகத்தை சார்ந்த இருவர் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திருமணம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. 

tirunelveli marxist communist office attack

கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் இந்த திருமணம் நடந்ததை கேள்விப்பட்ட பெண் வீட்டார்  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து நாற்காலி, கண்ணாடி எல்லாம் உடைத்து அலுவலகத்தை சூறையாடியுள்ளனர். 

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்!

சாதி மறுப்பு திருமணம் - செய்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல்!

எடப்பாடி பழனிச்சாமி

இதற்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

edppadi palaniswamy

ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.