அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

M K Stalin Edappadi K. Palaniswami Thanjavur
By Karthikraja Nov 20, 2024 09:20 AM GMT
Report

 ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை கொலை

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளியில் வகுப்பறையில் வைத்து ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை கத்தியால் குத்திய மதன்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

thanjavur teacher murder

ஆசிரியர் வகுப்பறையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் - வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் - வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை

எடப்பாடி பழனிசாமி

 அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். 

edappadi-Palanisamy

விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.