Monday, Apr 28, 2025

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் - வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை

Thanjavur Death School Incident Teachers
By Karthikraja 5 months ago
Report

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியை வகுப்பறையில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை கொலை

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 மாதங்களாக ரமணி(26) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

thanjavur teacher class room

இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ரமணி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்கு வந்த மதன் என்ற நபர் வகுப்பறையில் வைத்தே ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். 

வீடியோவை காட்டி படுக்கைக்கு அழைத்த 10 ஆம் வகுப்பு மாணவர் - ஆசிரியை எடுத்த முடிவு

வீடியோவை காட்டி படுக்கைக்கு அழைத்த 10 ஆம் வகுப்பு மாணவர் - ஆசிரியை எடுத்த முடிவு

ஒரு தலை காதல்

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஆசிரியை ரமணியை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆசிரியை கத்தியால் குத்திய சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். 

thanjavur teacher class room death

விசாரணையில் மதன் குமார், ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்ற போது மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.