மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசு.. பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது - எடப்பாடி தாக்கு!
மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி தாக்கு
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே,
அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் கடந்த 02.09.2024 அன்று திறக்கப்பட்டது, காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது.
திமுக அரசு..
இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டபடுகிற பாலங்களை மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என்று தெரிவித்துள்ளார்.