ஸ்டாலின் 20 ஆண்டுகள் உழைத்துள்ளார். ஆனால்.. - எடப்பாடி பழனிசாமி

Udhayanidhi Stalin Vijay M K Stalin ADMK Edappadi K. Palaniswami
By Karthikraja Nov 03, 2024 09:30 AM GMT
Report

2026 சட்டமன்றத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சேலம் வீரப்பம்பாளையத்தில் இன்று(03.11.2024) அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். 

edappadi palanisamy

கூட்டத்தில் பேசிய அவர், "மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல், தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்து வருகிறார்கள் என பேசினார். 

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி

விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் உழைப்பு

மேலும், "திமுகவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கட்சிக்காக எந்த உழைப்பும் இல்லாமல், உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். 

edappadi palanisamy

அவருக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி? உதயநிதி மட்டும்தான் கட்சிக்காக உழைத்தாரா? மற்றவர்கள் யாரும் உழைக்கவில்லையா? 2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும் என பேசினார்.

இதன் பின் விஜய் அதிமுக பற்றி பேசாதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, " மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும். மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை" என பதிலளித்தார்.