ஆளுநர் உரையில் புதிய திட்டம் இல்லை..ஏமாற்றம் தான் - எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்
ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் வணக்கம் எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார். அப்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்கவே என கோஷம் எழுப்பினர்.
அதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதிமுக.விசிக, பாமக உள்ளிட்ட கட்சியினை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என
புதிய திட்டம்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில் ஆளுநர் திடீரென சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பேரவையில் இருந்து அதிமுக நிர்வாகிகளும் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என தெரிவித்தார். மேலும், ஆளுநர் பாதியில் வெளியேறியது குறித்த கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.