முதலமைச்சர் குற்றச்சாட்டு...சட்டப்பேரவையை விட்டு திடீரென வெளியேறிய ஆளுநர் - சட்டப்பேரவையில் பரபரப்பு
அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை எனக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில் ஆளுநர் திடீரென சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறிய ஆளுநர்
தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தொடக்கத்திலேயே திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்தி வந்தார். அப்போது அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முறையாக வாசிக்கவில்லை.
அதாவது ஆளுநர் உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல், போன்ற வார்த்தைகளை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநர் உரைக்கு பின்னார் சபாநாயகர் தமிழில் உரையாற்றியனார்.
பின்னர் திடீரென முதலமைச்சர் எழுந்து பேசினார் அப்போது, அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் தெரிவித்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது - முதலமைச்சர்
அரசு தயாரித்த ஆளுநர் உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவுக்கு கோரிக்கை வைத்தார்.
அப்போது ஆளுநர் திடீரென சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதை தொடர்ந்து ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் பாதியில் வெளியேறும் போது வாழ்க தமிழ்நாடு என திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.