என்னோட ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் : திண்டுக்கல் சீனிவாசன்
திமுகவில் ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் என்று கூறியுள்ளார்.
கூட்டம் போட்ட அதிமுக
நேற்று அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
எனது ஆதரவு எடப்பாடிக்குதான்
இந்த கூட்டத்தில் பெரும்பாலோனோர் அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். நேற்று ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தநிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி அவர்களது இல்லத்தில் தனித்தனியாக அவர்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘பேச்சுவார்த்தை நடந்துகொண்டு வருகிறது. என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் என்றும், ஒற்றை தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு wait and see என்றும் தெரிவித்துள்ளார்.
இனி கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்