இனி கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே என மதுரை உயர்நீதி மன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முதல் மரியாதை விவகாரம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய சேதுபதி என்பவர் மதுரை உயர்ந்நிதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயில் திருவிழாக்களில் யாருக்கு முதல் மரியாதை கிடையாது என தெரிவித்தார்.
கடவுளேக்கே முதல் மரியாதை
இதனை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி : "கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்லஎன்றும் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் எனவும் .
யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.