கடும் மோதலிலும் அன்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி- பிரதமர் மோடிக்கு வாழ்த்து
3வது முறையாக பிரதமராகும் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார்.
இதன்மூலம் அவர் முன்னாள்பிரதமர் நேருவின் சாதனையை அவர் சமன் செய்ய உள்ளார். இத்தகைய சூழலில் மோடிக்கு அவரது கூட்டணி கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தான் தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,
பிரதமர் மோடி
அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அந்த கூட்டணி உடைந்தது. மேலும் இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதோடு அதிமுக மற்றும் பாஜக இடையே அடிக்கடி வார்த்தை போர் நீடித்தது. இந்த சூழலில் நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடிக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.