வாய்ச்சவடால் விடும் விடியா திமுக - சவுக்கு சங்கர் தாக்கப்பட்டுள்ளார்!! இபிஎஸ் கண்டனம்

AIADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Karthick May 07, 2024 10:14 AM GMT
Report

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நிலையில், அவருக்கு சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி  அறிக்கை

இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடக பத்திரிக்கையாளர் திரு. சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைது செய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

edappadi palanisamy condemns savuku attack

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வாய்ச்சவடால்

பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

பிளாஸ்டிக் பைப்பில் - சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து - கதறும் வழக்கறிஞர்

பிளாஸ்டிக் பைப்பில் - சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து - கதறும் வழக்கறிஞர்

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.