விஜய் பேசுவதையெல்லாம் கண்டுக்காதீங்க; அண்ணாமலை வேண்டாம் - இபிஎஸ்
விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் பேச்சு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
இபிஎஸ் அறிவுரை
“புதிதாக கட்சி தொடங்கியவர்கள், கட்சி வளர்ச்சிக்காக எதையாவது பேசுவார்கள் என்பதால் தவெக தலைவர் விஜய் பேசுவதை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அண்ணாமலை நம்மைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.
ஆகவே நீங்களும் அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாதா? என பல பேர் வெளியில் காத்திருக்கிறார்கள்.
கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் தேவையற்ற விவாதங்களை, பேச்சுக்களை தவிருங்கள். கலம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதை தேர்தல் பிரச்சாரத்தில் நேரில் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.