அறிவில்லை.. முதல்வர அங்கிள்-னு சொல்ற - விஜய்யை ஒருமையில் திட்டிய ரஞ்சித்!
இந்து முன்னணி மேடையில் தவெக தலைவர் விஜயை நடிகர் ரஞ்சித் ஒருமையில் திட்டினார்.
விஜய் பேச்சு
இந்து முன்னணி அமைப்பின் கோவை, வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “அமெரிக்காவே வியந்து பார்க்கிற ஒரே பிரதமர் மோடியை, விஜய் சொடக்கு போட்டு Mr.மோடி ஜீ-னு சொல்றாரு. 2014 ஏப்ரல் 16-ல கொடிசியாவில் மோடி முன்னாடி பூனை மாறி பம்மிட்டு உட்கார்ந்து இருந்திங்களே தம்பி.
விளாசிய ரஞ்சித்
அன்னைக்கு எதுக்கு வந்து பார்த்தீங்க, கச்சத்தீவ மீட்கவா? தலைவா படம் ஓடணும்னு வந்து பார்த்தீங்க. பழச எல்லாம் மறந்துட்டீங்களா? உனக்கு மூளையில பிரச்சனை இருக்குனு நினைக்கிறேன். அறிவில்லை. முதல்வர அங்கிள்-னு சொல்ற.
வர்ற கோபத்துக்கு விஜய்யை ஓங்கி குத்த வேண்டுமுனு தோணுது, ஆனால் எல்லாத்தையும் ஓட்டுல குத்துங்க. சினிமாவில் ரிட்டையர் ஆன பிறகு பிழைப்பு தேடி அரசியலுக்கு வரவில்லை என யாரை சொல்றீங்க..?
நாம் சொந்த நாட்டில் அகதிகளாக உள்ளோம்; இங்கு பொட்டு வைப்பதில் கூட பிரச்னை உள்ளது. ஒன்று இரண்டால்ல.. நூறு முறை சங்கி என்றால் கூட நான் மனதார ஏற்றுக் கொள்வேன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.