திட்டத்துக்கு கலர் கலரா பேர் வச்சா மட்டும் போதாது.. ஆற்றில் மிதந்த மனு - அண்ணாமலை கொதிப்பு!

M K Stalin Tamil nadu K. Annamalai
By Sumathi Aug 29, 2025 01:32 PM GMT
Report

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

annamalai

அந்த வரிசையில் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி, பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதப்பதாக தகவல் வெளியானது.

விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து குற்றம் சாட்டியுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

அண்ணாமலை இடியட் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - டி.ஆர்.பாலு கொதிப்பு!

அண்ணாமலை இடியட் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - டி.ஆர்.பாலு கொதிப்பு!

சாடிய அண்ணாமலை

“திட்டங்களுக்கு கவர்ச்சியாக பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் இந்த பேட்ச்வொர்க் மாதிரி திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது. சமீபத்தில் தொடங்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" என்று அழைக்கப்படும் திட்டம்,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் மிதக்கும் குறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனுக்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில், திமுகவின் உயர்ந்த தேர்தல் வாக்குறுதிகள் கூட சாக்கடையில் போய்விட்டன, இன்று, மக்களின் குறைகள் கூட குப்பைகளைப் போல வீசப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.