விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ் - பரபரப்பாகும் அரசியல் களம்

Vijay ADMK BJP Seeman Edappadi K. Palaniswami
By Sumathi Jul 22, 2025 07:19 AM GMT
Report

எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய்-சீமான் 

தனியார் பத்திரிகை ஒன்றிற்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சியையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

vijay - eps - seeman

ஆட்சியில் பங்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை.

கருணாநிதியின் மூத்த மகன் காலமானார்; இந்த துயரம் வதைக்கிறது - மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் மூத்த மகன் காலமானார்; இந்த துயரம் வதைக்கிறது - மு.க.ஸ்டாலின்

இபிஎஸ் அழைப்பு

அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வருவதற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன். திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்தக் கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம். விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார்.

விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ் - பரபரப்பாகும் அரசியல் களம் | Edappadi Palanisamy About Seeman Vijay Alliance

எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும். சீமான் கட்சி குறித்த கேள்விக்கு, எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும்

யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.