நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ்
நான் டெல்லி சென்றதைதான் சட்டபேரவையிலேயே திமுகவினர் பேசுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கிண்டலாக கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“நான் டெல்லி சென்றதை பற்றி திமுகவினர் 3 நாட்களாக பேசிவருகின்றனர். நான் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துள்ளதால் துணை முதலமைச்சர் காய்ச்சல் வந்து படுத்துக் கொண்டார்.
டெல்லி பயணம்
நான் டெல்லி சென்று வந்ததை பற்றி சட்டப்பேரவையிலும் 2 நாட்களாக பேசுகிறார்கள். போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
ஆப்ரேசன் கஞ்சா திட்டம் என்ன ஆனது? காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதை பொருள் வியாபாரிகள் தைரியம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மக்களை பற்றி அரசுக்கு கவலையில்லை. எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும், பேரவையில் துணை முதல்வரின் பதிலுரை தடைபடக்கூடாது என நினைக்கின்றனர்” எனத் தெரிவித்துளார்.