தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி வைத்த 3 கோரிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியிடம், எடப்பாடி பழனிசாமி 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். நேற்று இரவு தூத்துக்குடி வந்த அவர், விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார்.
[R0FH7O
அதன் பின்னர், இரவு 10 மணியளவில் திருச்சி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் ஆகிய கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
3 கோரிக்கைகள்
இந்தச் சந்திப்பின்போது, 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இந்த மனுவில், "'விவசாயக் கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விலக்களிக்க வேண்டும்.
தளவாட உற்பத்திக்கு வழிவகுத்து, ராணுவ வழித்தடத்தை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்." ஆகிய 3 கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.
மோடியின் பயணத்திட்டம்
இதை தொடர்ந்து, திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு முதலாம் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலுக்கு செல்கிறார்.
வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு கங்கைகொண்ட சோழீசுவரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து விட்டு, தியானம் செய்ய உள்ளார்.
பின்னர், முதலாம் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அப்போது, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் மதியம் 1.45 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி சென்று, விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |