பெருந்துறையில் இருக்குது கம்பெனி..அதுக்கு ஸ்பெயின் போயிட்டாரு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!

M K Stalin ADMK DMK Edappadi K. Palaniswami
By Karthick Feb 01, 2024 04:36 AM GMT
Report

பெருந்துறையில் இருக்கும் நிறுவனத்திற்காக புரிந்துணர்வு மேற்கொள்ள ஸ்பெயினுக்கு சென்றுவிட்டார் முதலமைச்சர் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் மற்றும் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் ஓராண்டில் சென்னையில் மழைநீர் வடிநீர் வாய்க்கால் பணிகளை முடித்திருப்போம் என்று தெரிவித்து, பணிகள் எதுவும் முடிக்காமலேயே 98% பணிகள் முடிந்துவிட்டதாக அமைச்சர்களும் மேயரும் பொய் சொன்னார்கள் என சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார்.

edapadi-slams-cm-mkstlain-spain-trip-

எம்.ஜி.ஆர் மக்களுக்காக கட்சி நடத்தியவர் என்று பாராட்டி, ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி தான் திமுக என்றும் அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு சாமானியன் கூட அதிமுகவில் பொதுச் செயலாளர் ஆக முடியும் என்று தன்னை குறிப்பிட்டு, திமுகவில் இது நடக்குமா என்று வினவினார்.


எதில் நம்பர் 1

இந்தியாவிலேயே தன்னை நம்பர் 1 முதலமைச்சர் என ஸ்டாலின் சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில் தான் நம்பர் 1 என சாடி, மோசமான முதலமைச்சர் பட்டியலில் ஸ்டாலின் தான் முதலிடம் என்று தெரிவித்தார்.   

edapadi-slams-cm-mkstlain-spain-trip-

அரைகுறையாக பணிகளை முடிப்பதற்கு முன்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்பிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை, ஆனால் கார் ரேஸ், பேனாவிற்கு சிலை வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என்றார்.

edapadi-slams-cm-mkstlain-spain-trip-

தொடர்ந்து முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பெருந்துறையில் உள்ள நிறுவனத்துடன் புரிந்துணர்வு மேற்கொள்ள ஸ்பெயினுக்கு சென்றுவிட்டார் முதலமைச்சர் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, முதலீட்டு மாநாடு புரிந்துணர்வு மேற்கொள்ளாமல் ஸ்பெயின் ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டார்.

edapadi-slams-cm-mkstlain-spain-trip-

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது என நம்பிக்கை தெரிவித்து, கூட்டணி வெற்றி பெற்றால் வலுவான இலாக்காக்களை மத்தியில் அரசில் இருந்து பெற்று ஊழல் செய்யலாம் என்ற ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நடக்காது என்றும் தெரிவித்தார்.