சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி அதிரடி!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Feb 01, 2024 02:24 AM GMT
Report

சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சி.ஏ.ஏ) தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.

சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி அதிரடி! | Aiadmk Will Never Allow Caa Edappadi Palaniswami

ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.

உறுதியாக எதிர்க்கும்

கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது - எடப்பாடி பழனிசாமி அதிரடி! | Aiadmk Will Never Allow Caa Edappadi Palaniswami

சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்.ஐ.ஏ, யு.ஏ.பி.ஏ சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.