இவளோ நாள் எங்க போனாங்க இப்போ காப்பாத்த? சசிகலாவிற்கு இபிஎஸ் கேள்வி
எடப்பாடி செய்தியாளர் சந்திப்பு
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு, தற்போது டெல்டா மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக 3 லட்ச குறுவை கருகிப்போயின.
இந்த அரசாங்கம் காப்பீடு திட்டத்தில் குறுவை சாகுபடியில் சேர்க்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக டெல்டா பாசன நெற்பயிர்களுக்கு அரசு காப்பீட்டில் இடம் பெற செய்யவில்லை. இதனால் பெரும் பாதிப்பு. மத்திய அரசு ஒரு ஹெக்டருக்கு 17 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு அறிவுறுத்திய போதிலும், மாநில அரசு 13,500 ரூபாய் தான் இழப்பீடு தந்துள்ளது.
என்னுடைய Entry துவங்கிவிட்டது ...தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது !! தொண்டர்களை குஷியாக்கிய சசிகலா
அதிமுக அரசின் போது ஒரு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் தந்தோம். 2 முறை அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட போது, இந்தியாவிலேயே அதிக காப்பீடு பெற்று கொடுத்தது அதிமுக அரசு. மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ளது.
இவ்ளோ நாள்
அரசு அதனை கட்டுப்படுத்த வேண்டும். டிடிவி தினகரன் அதிமுக திமுகவின் பி டீமாக செய்லபடுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, அவர் எதாவது பேசணும் என பேசுவார். இல்லனா அவரை மக்கள் மறந்து விடுவார்கள். அதே போல சசிகலா குறித்த கேள்விக்கு, இத்தனை நாளா? யார் காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இது என்ன வேலைக்கு போறதா? 2021'இல் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிவிட்டதாக சொன்னாங்க. யார் காப்பாத்துன இவளோ வருஷம் தொண்டன். விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடாதது காரணம், ஈரோடு இடைத்தேர்தல் தான். யாராவது கேக்குறீங்களா. மக்களை அடைத்து வைக்குறாங்க.
நாங்க எங்க பொய் ஓட்டு கேக்குறது.
அதிமுக ஜாதி கட்சி என சசிகலா சொன்னதற்கு பதிலளித்தவர், எந்த அடிப்படையில் சொல்றாங்க. தலைமை கழக நிர்வாகிகளில் எல்லா ஜாதியை சேர்ந்தவர்களும் இருகாங்க.
அதிமுக ஜாதிக்கு இடமில்லை. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக.