இனியும் பொறுக்க முடியாது - திடீரென டெல்லி கிளம்பும் இபிஎஸ்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம்
இந்தியாவையே உள்ளுக்கியுள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம். அடுத்தடுத்து அதிகரித்த மரணம் ஒரு ஊரையே சுடுகாடாக மாற்றியது. 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்னும் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை சிபிசிஐடி'க்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறு வரும் சூழலில், இதனை சிபிஐ'க்கு மாற்றவேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் தமிழக தலைவர்கள்.
டெல்லி பயணம்
இந்த சூழலில் தான், இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர், இந்த விவகாரம் தொடர்பான குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பேசவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதே போல விஷச்சாராய மரணம் தொடர்பாக அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.