சமஸ்கிருதம் கலந்த இந்தியில் சட்டமா? ஏற்புடையதல்ல !! எடப்பாடியார் கண்டனம்

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami India
By Karthick Jul 02, 2024 02:15 AM GMT
Report

 தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 சட்டங்கள் - இபிஎஸ் கண்டனம்

நேற்று முதல் நாட்டில் 3 புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தன. இதற்கே கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த சட்டங்களின் பெயர்கள் இந்தியில் அமைந்துள்ள கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கின்றது.

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள் - சிறப்பு என்ன? பாதிப்பு என்ன?

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள் - சிறப்பு என்ன? பாதிப்பு என்ன?

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

ADMK General Secretary Edapadi Palanisamy angry

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட,

ADMK General Secretary Edapadi Palanisamy angry

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.

இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது,

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.