மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் - மூடிமறைக்கிறது அரசு !! எடப்பாடியார் கண்டனம்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடியார் கண்டனம்
அந்த ட்விட்டர் பதிவில்,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வந்த நிலையில், அதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த விடியா திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது
வாடிக்கையாகி...
ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது "இனி இதுபோல் நடக்காது" என்று விடியா திமுக முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் திரு. @mkstalin அவர்கள் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை.
தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று விடியா திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வந்த நிலையில், அதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம்…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 30, 2024