கட்சி பிரமுகரே வெட்டி கொலை...ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை - எடப்பாடியார்

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Karthick Jun 30, 2024 07:14 AM GMT
Report

கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் கட்சி பிரமுகர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மர்ம கும்பலால்...

அதில் , கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அஇஅதிமுகமாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான திரு. புஷ்பநாதன் அவர்கள் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.

டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை...நிவாரணம் வழங்கவும்!! எடப்பாடியார்

டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை...நிவாரணம் வழங்கவும்!! எடப்பாடியார்

EP

அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிர்த்துக்கொள்வதுடன், மறைந்த திரு. புஷ்பநாதன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். விடியா ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.

மக்கள் அச்சத்துடனே

பகல்-இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண்.

eps new twitter post

திரு. புஷ்பநாதன் அவர்களைப் படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.