520 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டாரா..? பொய் சொல்லும் முதல்வர் - இபிஎஸ் விமர்சனம்
மதுரையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.
அதிமுக மக்களவை தேர்தல்
பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய அதிமுக மத்திய - மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.
இரு அரசுகளின் மீதிருக்கும் அதிருப்தி வாக்குகளை இந்த தேர்தலில் குறிவைத்துள்ள அதிமுக, தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
இபிஎஸ் பிரச்சாரம்
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது வருமாறு,
அதிமுகவில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும், திமுகவில் வர முடியுமா?. தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல். MLA, MP'க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல.
மிக்ஜாம் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.
நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன். 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர். தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.