98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்களா? - திமுக சொல்வது பச்சைபொய் - இபிஎஸ் கடும் விமர்சனம்

ADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Karthick Apr 17, 2024 07:05 AM GMT
Report

வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக திமுக சொல்வது அனைத்தும் பச்சை பொய் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு

மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓயும் நிலையில், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை.

edapadi-palanisamy-slams-dmk-and-cm-mk-stalin

மத்திய அரசை கண்டிப்பதுடன், 2021-ஆம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த டீசல் விலை குறைப்பை தமிழக அரசு செய்யவில்லை. காவேரி நதிநீர் விவகாரத்தில் திமுக அரசு சரியான முறையில் கையாளாத நிலையில், தண்ணீர் திறக்கவில்லை. இப்பொது அணை காட்டுவதாக தெரிவிக்கிறார்கள்.

அதிமுகவிற்கு வாக்களியுங்கள் 

இரண்டு தேசிய கட்சிகளும் அதையே சொல்கிறார்கள். அணை கட்டப்பட்டால், தமிழகம் பாலைவனமாகிவிடும். ஆனால், அணை கட்டுவதற்கு ஒரு கண்டனம் கூட தமிழக அரசு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் - திமுக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதால், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கூட பொருட்படுத்தவில்லை.

edapadi-palanisamy-slams-dmk-and-cm-mk-stalin

அனைவரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவேண்டும். சில பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு அடிபணிந்து, அதிமுக பின்னடைவு பெரும் என கருத்து திணிப்பை வெளியிடுகிறார்கள். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக - திமுக என 3 கட்சிகளுமே பணம் பெற்றுள்ளார்கள்.

அதிமுக நாட்டிற்கான கட்சி - திமுக வீட்டிற்கான கட்சி - எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக நாட்டிற்கான கட்சி - திமுக வீட்டிற்கான கட்சி - எடப்பாடி பழனிசாமி காட்டம்

பச்சை பொய் 

பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தேர்தலின் போது, தமிழகத்திற்கு வந்து செல்வதில் எந்தவித உபயோகமும் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. மக்களுக்கு சேவை செய்யும் இயக்கத்தை அழிப்போம் என நினைப்பது நினைக்காத காரியம்.

edapadi-palanisamy-slams-dmk-and-cm-mk-stalin

சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்திற்க்கும் குறைவான அறிவிப்புகளை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் சொல்வது பச்சை பொய்