அதிமுக வாக்குகளை குறிவைக்கும் திமுக? இபிஎஸ் பரபரப்பு அறிக்கை
தமிழக அரசியலின் மைய புள்ளியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மாறியுள்ளது.
புறக்கணிப்பு
இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது அதிமுக. அவர்களின் வாக்குகளை தான் மற்ற 3 கட்சிகள் - திமுக, பாமக, நாம் தமிழர் குறிவைத்துள்ளன.
பிரச்சாரத்தில் வெளிப்படையாக அதிமுக, தேமுதிகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.
அதே நேரத்தில், அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, திராவிட கட்சிகள் என்ற அடைப்படையில்,புறக்கணித்த அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என கூறியிருந்தார்.
நாம் தமிழர் வெளிப்படையாக வேலை செய்யாத நிலையிலும், மறைமுகமாக அதிமுக பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை குறிவைக்கிறது.
கோரிக்கை
இந்நிலையில், தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் கட்சியின் மாவட்ட, கிளை செயலாளருக்கு அதிமுகவின் வாக்கு பாமகவிற்கு சென்று விட கூடாது என உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகையால் வாக்குகள் திமுகவிற்காக என்றால், இதில் பேச்சுவார்தைகே இடமில்லை. திமுக என்றும் அதிமுகவின் எதிரி தான்.