எதனால் தோல்வி - எடப்பாடியார் தலைமையில் ஆலோசனை கூட்டம் - எழுச்சி பெறுமா அதிமுக?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணி போட்டியிட்ட அணைந்து இடங்களும் தோல்வியடைத்துள்ளது.
அதிமுக தோல்வி
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என அக்கட்சி நிர்வாகிகளும், ஏன் தலைவர்களும் கூட நம்பியிருப்பார்கள். ஆனால், அவை அனைத்தும் சுத்தமாக பொய்யாகி போயுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக - SDPI - புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கூட்டணி பெறும் தோல்வியை சந்தித்துள்ளது. 33 இடங்களில் நின்ற அதிமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
ஆலோசனை
இது அதிமுகவுக்கு விழுந்த பெரிய இடியாகவே உள்ளது. இந்த சூழலில் தான், தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி வாரியாக அவர், ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.