ஜானகி அம்மாவை போல சசிகலா இருக்கனும் - ஒதுங்க சொல்கிறாரா எடப்பாடியார்?
அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல அணிகளாக பிரித்து விட்டது.
உடைந்த அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, துவங்கிய உட்கட்சி பூசல் இன்றும் தொடருகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகியுள்ளார். ஓபிஎஸ் தனித்து நிற்கிறார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வருகிறார்.
அதே நேரத்தில், சசிகலா தான் மீண்டும் கட்சியை 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இணைப்பேன் என கூறுகிறார். வெளிய வந்த தினகரன் அமமுக கட்சியை நிறுவி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் வந்துவிட்டது. இவ்வளவு நடந்தும் இன்னும் பிரச்சனை ஓயவில்லை.
ஜானகி போல...
அண்மையில் பேட்டியளித்த சசிகலா, இது தன்னோட என்ட்ரி என கூறி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக தொண்டர்களின் கரகோஷத்தில் பேசினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்ட போது,
அவர் எப்படி கட்சியை ஒன்றிணைகிறது. அவர் கட்சியிலேயே இல்லையே. மீண்டும் அதிமுக ஆட்சி அமையவேண்டுமென்று நினைத்தால், எப்படி ஜானகி எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அறிக்கை வெளியிட்டார்.
ஜெயலலிதாவே கட்சியை வழிநடத்துவர் என்று. அந்த நற்பண்பு இவருக்கும் இருக்கும் என நாங்க எதிர்பார்க்கிறோம்.
அப்படி நல் எண்ணத்தில் அடிப்படையில் அவர் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என கட்சி தொண்டர்கள் நினைக்கிறார்கள்.