அதிரடி காட்டும் அமலாக்கத் துறை - முடக்கப்பட்ட ஆ.ராசா சொத்துக்கள்!!
வழக்கின் பின்னணி என்ன? திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் சொத்துக்களை அதிரடியாக முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை துறை.
அமலாக்கத்துறை அதிரடி
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சரவையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன்பிறகு அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்த நிலையில் தான் தற்போது அடுத்த அதிரடியை அமலாக்கத்துறை காட்டியுள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்த 2002 வருட சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஆ.ராசா மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
வழக்கு என்ன..?
வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 33 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், ஆ.ராசா மற்றும் சில நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் இந்த அதிரடியை அமலாக்கத்துறை காட்டியுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கோவை ஷெல்டர் புரமோட்டார்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.