கேமிங் ஆப்.. நூதன மோசடியில் கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம் - எப்படி?
கேம் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.17.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் அகமதுகான்
மேற்கு வங்கம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அகமதுகான். இவர் சீன கேமிங் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

மேலும், 'இ-நட்ஜட்ஸ்' என்று பெயர் கொண்ட அந்த கேம் செயலியில் விளையாடும் நபர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்தது. 'இ-நக்கட்ஸ்' கேம் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வரும் சுலபமான புதிர் விளையாட்டை
கேம் செயலி
பணம் கட்டி விளையாடினால் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் கட்டும் பணத்திற்கு கூடுதல் பணம் திரும்பி வருகிறது. பணம் கணக்கில் ஏறிய உடன் நமது செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், இந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் இருமடங்கு பணம் கிடைக்கும் என மெசேஜ் வருகிறது.
அந்த மெசேஜை நம்பி, கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அதில் வரும் லிங்கை கிளிக் செய்து பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், முதலீடு செய்த பின்னர் அந்த பணத்தை அதில் இருந்து திரும்பப்பெற முடியாது.
பண மோசடி
இவ்வாறு 'இ-நக்கட்ஸ்' கேம் செயலி மூலம் பண மோசடி நடந்துள்ளது. புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, அகமதுகானுக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனையில் ரூ.17.5 கோடி ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.