பண மோசடி புகார்..இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு
கோவையில் மோசடிப் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததால், மனஉளைச்சலுக்கு ஆளான இந்து மக்கள் கட்சி ஜோதிட பிரிவைச் சேர்ந்த பிரசன்னா, குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடப் பிரச்சினை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கருப்பையா (45) தொழிலதிபரான இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இடம் ஒன்று இருந்துள்ளது. இந்த இடம் பிரச்சினையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த இடப் பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி, கருப்பையாவுக்கு இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்னா (41) கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதை நம்பி கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 கொடுத்ததாக தெரிகிறது. மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இடபிரச்சினை தீர்ந்தமாடில்லை.
போலீசில் புகார்
இதனையடுத்து, பண மோசடி செய்ததாக, பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி (31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோர் மீது கருப்பையா போலீசில் புகார் கொடுத்தார். இவரின் புகாரையடுத்து, பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை முயற்சி - தாய் மரணம்
இந்நிலையில் நேற்று பிரசன்னா உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள இல்லத்தில், மனைவி, தாய், 2 மகள்கள் என தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதில் ஒரு மகள் மட்டும் விஷம் குடிக்காமல், பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் ஓடிச் சென்று கூறியுள்ளார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பிரச்சனாவையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியில் பிரசன்னாவின் தயார் சிகிச்சை பலனின்றி உரிழந்தார். மேலும், 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ அனுப்பிய பிரசன்னா
இந்த வழக்கு பொய்யானது என்றும், இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆழ்கியுள்ளதாகவும், தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது. நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்யப் போகிறேன் என்று வீடியோ எடுத்து தன்னுடைய நண்பர்களுக்கு அவர் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.